Wednesday 26 June 2013

அகல் மொழி பத்து - பாகம் 5


41. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களைக் கண்டு எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றி யாரேனும் பேசிக் கொண்டிருப்பார்கள்

42. தெரியாமல் கூட தவறுகள் செய்யாமல் இருந்தால் அது அழகாக வடிவமைக்கப்பட்ட இயந்திரமாகவே இருக்க முடியும். நான் மனிதன்.

43. விதியை மதியால் வென்றாலும் அதுவும் விதியே.

44. ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கும் குத்திக்காட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் சரியான ஒன்றைப் பயன்படுத்துதல் அவசியம்.

45. அடிமைத் தனத்தை எதிர்க்கும் தொழிலாளிகளைப் பிடித்துப்போன முதலாளிகள் எவருமில்லை.

46. உதவ முடியும் தருணங்களில் காட்டப்படும் வெறும் அனுதாபம் என்பது அர்த்தமற்றது.

47. எவரையும் எனது போட்டியாளனாகப் பார்க்கவில்லை. எனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பாதை புதிது என்பதால், அதில் சில தடைகள் இருக்கலாம் அல்லது நான் வழி தவறிப் போகலாம். அதைத் திருத்திக்கொண்டு பயணிப்பது என் கடமை.

48. உங்கள்மேல் வெறுப்பாகப் பேசுபவர்களை நீங்கள் வெல்ல வேண்டுமானால் அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்துவிடுங்கள்.

49. உறவுகளைத் தாண்டி ஒவ்வொருவரின் வாழ்விலும் மனத்திற்கு மிக நெருக்கமான இடத்தில் வைத்து அன்பு பாராட்ட ஒரே ஒருவர்தான் கிடைப்பார்கள். அப்படி கிடைப்பவர்களும் நம்மோடு தொடர்ந்து பயணிக்க முடியாத இடத்திலேயே இருப்பார்கள்.

50. சிலமுறை, ஒருவர் சொல்லும் வாக்கியத்தை அவரவர் இருக்கும் மனநிலைக்கு உகந்தாற்போல் புரிந்துகொள்வது உளவியல் நியதி. அந்த புரிதலின் அடிப்படையில் ஆங்காங்கே வீசப்படும் தனிமனித விமர்சனங்களும் இயல்பு. அதே மனநிலைகளில் இருப்பவர்கள் ஒன்று சேர்வதும் தவிர்க்க இயலாத ஒன்று. இதற்கான தீர்வு, ஒவ்வொரு விடயமும் அதக்கு மிகச் சரியான வடிவில் (எழுத்து, பேச்சு) விவாதிப்பதாகவே இருக்கமுடியும்.

முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 4

மொழியும் புகைப்படமும்,
அகல்

14 comments:

  1. சிறப்பான கருத்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா... கருத்திக்கு நன்றிகள்...

      Delete
  2. அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்..

    41, 44, 47, 48 - இதில் எது சிறந்தது...? 41 & 44 யை 47 முழுங்கி விடுவதால் 48...! ஹிஹி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாலன் சார்... மிகவும் உன்னிப்பாக வாசித்திருகிறீர்கள் போல... கருத்துக்களை தொடர்புப் படுத்தியதிலிருந்து தெரிகிறது.. நல்ல விமர்சனம்... நன்றி சார்...

      Delete
  3. நல்லாத் தான் சொல்றீங்கள், ஆனால் கேட்பவர் கேட்பர் கேட்காதோர் கேளாதோர்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பாஸ்... அது தனிமனிதனைப் பொறுத்தது... எனது வலைபூவிற்கு முதல்முறை வந்திருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. கருத்திற்கு நன்றிகள் பாஸ்..

      Delete
  4. சிறப்பான நற் கருத்துகளுக்கு வாழ்த்துக்கள் சகோ .
    மேலும் சிறப்பாகத் தொடரட்டும் மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி... உங்களது கருத்துக்களுக்கு நன்றிகள் பல..

      Delete
  5. தெரியாமல் கூட தவறுகள் செய்யாமல் இருந்தால் அது அழகாக வடிவமைக்கப்பட்ட இயந்திரமாகவே இருக்க முடியும். நான் மனிதன்
    >>
    மிகச்சரியான கருத்து அகல்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பிடித்த மொழியை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் ராஜி...

      Delete
  6. சில நேரங்களில் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி அர்த்தமற்ற செயலை செய்வது போல் ஒரு குற்ற உணர்ச்சி....பகிர்வுக்கு நன்றி அகல்....48 உண்மையான பதிலடி

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஜான்சி ...

      Delete
  7. பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள் அகல்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி அருணா...

      Delete