51. பெரும்பாலான நேரங்களில், ஒரு கருத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அந்த கருத்தின் ஆழத்திற்காக இல்லாமல், அதைச் சொன்னவரின் மீதுள்ள விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது.
52. நம்பிக்கையில்லை என்பதும் ஒரு நம்பிக்கையே.
53. அறப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா ? என்பதை ஒரு போராட்டத் தலைவன் தீர்மானிப்பதில்லை. போராட்டக்களம் தீர்மானிக்கிறது.
54. எதுவும் தெரியாது என்று சொல்பவனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்பவன் மிகவும் ஆபத்தானவன்.
55. அவலங்களை எதிர்த்துப் பேசாத சமூகம் அடிபட்டே சாகும்.
56. தனிமனித விமர்சனம் தவறல்ல. ஆனால் அது தவறு என்று தெரிந்த பின்னும் சரி என்று வாதாடுவது சரியல்ல.
57. உனக்காக அத்தனையும் விட்டுக் கொடுப்பேன் என்று சொல்லும் பெரும்பாலானோர், சிலமுறை குறைந்தபட்ச நியாயத்தைக்கூட விட்டுக் கொடுப்பதில்லை.
58. இங்கே நியாயங்கள் பேசப்படுவதில்லை, இடத்திற்கு தகுந்தாற்போல் கூறுபோட்டு விற்கப்படுகிறது.
59. நீங்கள் எதிர்கொண்ட நல்ல தருணங்களை அசைபோடுங்கள், அது இன்பத்தைத் தரும். கெட்ட தருணங்களுக்கு நன்றி சொல்லுங்கள். அது வாழ்வில் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கும்.
60. நாம் பேசியது தவறு என்று தெரிந்த பின்னும், அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயற்சிப்பதை விட, பேசியது தவறே இல்லை என்று சொல்லி விடலாம். காலப்போக்கில் அது மறக்கப்பட்டுவிடும்.
முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 5
மொழியும் புகைப்படமும்,
அகல்
அனைத்தும் அருமை...
ReplyDeleteஎனது அனுபவத்தில் உண்மை --> 59
வாங்க தனபாலன் சார்... தங்களின் முதன்மைக் கருத்திற்கு நன்றிகள் சார்...
Deleteellamey super..idhu unga experience la thondradha sir???
ReplyDeleteநன்றிகள் தேன்மொழி.. சிலது அனுபவம்... சிலது சுற்றி நடப்பதை கவனிப்பதில் தோன்றுவது... :)
Deletehmmm:-)ellamey new ah and differnt iruku..congrats..
Deleteநாம் பேசியது தவறு என்று தெரிந்த பின்னும், அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயற்சிப்பதை விட, பேசியது தவறே இல்லை என்று சொல்லி விடலாம். காலப்போக்கில் அது மறக்கப்பட்டுவிடும்.
ReplyDelete>>
யோசிச்சு பார்த்தா நிஜம்தான் போல இருக்கு!
நன்றிகள் ராஜி :)
Deleteஅருமையான பொன்மொழிகள் !!..வாழ்த்துக்கள் சகோ உங்கள் முயற்சி
ReplyDeleteதொடரட்டும் .
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோ...
Deleteஅனைத்தும் அழகான பொன் மொழிகள்...
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
Deleteவாழ்த்துகள் அகல் ...புதிதாக சொல்றீங்க ....52,56,58 ரொம்ப பிடித்திருக்கிறது
ReplyDeleteநன்றிகள் ஜான்சி....
Deleteஅனைத்தும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கருத்திற்கு மிக்க நன்றி குமார் சார்...
Deleteஉண்மை... அற்புதமான கருத்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சங்கவி சார்...
DeleteArumai unmaiyum kuda:)
ReplyDelete