Wednesday 17 October 2012

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ...

சப்பாத்திய கைல சாப்டுவோம்
ஆனா, சாதத்த ஸ்பூன்-ல
மட்டும் தான் சாப்டுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

வெளில போனா மினரல் வாட்டர்-ல
முகம் கழுவுவோம்..
வீட்டுக்குள்ள, உப்பு தண்ணி நாளும்
ஒன்னும் சொல்லம குடிப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

காஸ்ட்லி சாப்பாடு ஆடார் பண்ணி
காச குடுப்போம்
அது கம்மிய இருந்தாலும் முழுசா
திண்ண மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

கம்பெனி காசுனா,
காஸ்ட்லி சரக்கடிப்போம்
கை காசுனா ஓல்டு மாக்குனாலும்
யோசிக்காம குடிப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

லேப்டாப் இல்லாம இருக்க மாட்டோம்
ஆனா, படம் பாக்கறத தவிர வேற
எதுக்கும் பயன்படுத்த மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

டேட்டா கார்டு இல்லாம
ட்ராவல் பண்ண மாட்டோம்
ட்ரெயின்ல போனாலும் சீன்
போட மறக்க மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

அடிக்கடி ஹைஜீனிக்க
பத்தி பேசுவோம்
ஆனா சரக்கடிச்சிட்டு
சாக்கடையிலும் கெடப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

மூச்ச போட்டு மீட்டிங்க்ல பேசுவோம்
அது முடுஞ்சதுமே மொக்கேன்னு
சொல்லிக்குவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் எஞ்சினியர்..

ஆன் சைட் போயி
அடிமையா கெடப்போம்
ஆனா பில்டப்பு மட்டும்
பெருசா குடுப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

நாம்ம ஊர் சாப்பாட்டுக்கு
நாள் கணக்கா ஏங்குவோம்
ஆனா pizza வ பத்தி
பெருமையா பேசுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

பெருசா எல்லாம் தெரிஞ்சதா நெனச்சு
என்றிய போட்டு பேசுவோம்
ஒன்னும் தெரிலன்னு தெரிஞ்சதுமே
blha blha blha னு சொல்லுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

மாடர்ன் பிகர்சோட ஊர் சுத்துவோம்
ஆனா மங்களகரமான பொண்ணு
மட்டும் மனைவியாக நெனைப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

கடைசி ஸ்டுடென்ட்-டா வந்தாலும்
எங்க புள்ளைங்கள
காஸ்ட்லியான கான்வென்ட்-ல தான்
படிக்க வைப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

முக்கியமா..
வெளியூருக்கு போனா,
தமிழ் தெரிஞ்சவங்கள்டையும்
கண்டிப்பா தமிழ்ல பேசமாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

(பெண்களுக்காக சில...)

உப்மா செஞ்சத ஊருக்கே
தெரிய பேஸ்புக்குல போடுவோம்
அதையும் மதிச்சு amazing, fabulous,
fantastic னு பீட்டர குடுப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

ஊர்ல இருந்தா, சுடிதார், மருதாணி,
மஞ்சள், மல்லிகப்பூ..
ஊற கடந்தா., ஜீன்ஸ், டி-ஷர்ட்,
ஸ்லீவ் லெஸ், லோ நெக்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

இப்ப facial லும் பல,
ஹேர் வாசும் சில
ஆனா பிளாஷ் பேக் போன
மீரா சீகக்காய் மட்டும் தான்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

இதெல்லாம் சொல்றத கூட
சுத்த தமிழ்ல சொல்ல மட்டோம்ங்க..
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ..!!

ஆம், சொந்த அடையாளங்களை
வெள்ளைக்காரனிடம் விற்று விட்டு.,

போலி வாழ்க்கை வாழும்
பொறியாளர்கள் நாங்கள்..!

28 comments:

  1. //மீரா சீகக்காய் மட்டும் தான்//
    புலி மார்க் சீயக்காய் தூள் மட்டும் தான் மாற்றுங்கள்

    ReplyDelete
  2. ரசிக்கும் படி இருக்கிறது..

    பிழைகளுற்று எழுதினால் இன்னும் ரசிக்கலாம். :))

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அறிவான்... பிழைகளை மேற்கோள்காட்டினால் மகிழ்வேன் :)

      Delete
  4. உங்களை புரிந்து கொள்ள முடிந்தது
    முன்பு போல் இப்போது யாருக்கும் உங்கள் மேல்
    பொறாமை வருவதில்லை
    எல்லோரும் நவீன சித்தாள் கொத்தனார் போல
    எவ்வளவு சிரமப் படுகிறீர்கள் எனபது இப்போது
    எல்லோருக்கும் புரிந்திருக்கிறது
    (எங்கள் வீட்டிலும் மூன்று பேர் இதில்)
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Replies
    1. தங்களது கருத்திற்கு நன்றிகள் ரமணி சார்.. தங்களது வருகைக்கும் வாக்கிற்கும் சேர்த்து :)

      Delete
  6. யம்மா எவ்வளவு மேட்டர சொல்லியிருக்கிறீங்க
    ரூம் போட்டு யோசிப்பீங்களோ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றிகள் சிட்டுக்குருவி :)

      Delete
  7. நிறைய சொன்னிங்க ...கொஞ்சம் உரைநடை மாதிரி போயிட்டு....ஆனா அக்குவேரா ஆணிவேரா படையல் போட்டதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நல்லாவே இருக்கு. இதை அப்படியே நகைச்சுவை கட்டுரையா எழுதி இருந்தா இன்னும் நல்ல இருக்கும்னு நினைக்கிறன்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க தமிழ் நாடு (TN னா தமிழ்நாடுதானே? :):))முரளிதரன் அண்ணா......அகல் அண்ணா இந்த கருத்த மனப்பாடம் செய்ய வேண்டுகிறேன்...வாழ்த்துக்கள்

      Delete
    2. நன்றிகள் முரளிதரன்.. சதீஷ் எப்டி இதெல்லாம் கண்டுபிடிக்கிரிங்க :)

      Delete
  9. We only used English men picture, bcoz we are software engineers

    ReplyDelete
  10. போலி வாழ்க்கை வாழும்
    பொறியாளர்கள் ......!! அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி இராஜராஜேஸ்வரி :)

      Delete
  11. superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr post

    ReplyDelete
  12. செம செம ! மிக ரசித்தேன். குறிப்பாய் ரயிலிலும் லேப்டாப் வச்சிக்கிட்டு சீன் போடுறதை சொன்னீங்க பாருங்க அமர்க்களம் . அவர்களே இதை ரசிப்பார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே மோகன் குமார் :)

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நல்லாயிருக்கு,

    கல்யாணம் பண்ணாமலேயே அப்பா அம்மா விளையாட்டு மட்டும் விளையாடுவோம்,
    ஏன்னா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்

    ஊர்ல இருக்கும் விலை நிலங்கள் எல்லாம் பிலாட்டாக மாறுவது எங்களால்தான்
    ஏன்னா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்

    வீட்டுவாடகை, வீட்டுமனை விலை, காய்கறி அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏத்தி
    நடுத்தர மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்து விடுறதே நாங்கதான்
    ஏன்னா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்

    என்ற முக்கியமான பாயிண்டுகளையும் சேர்த்துக்குங்க!!

    ReplyDelete
  15. ஆஹா...சூப்பர் !

    சம கால நிகழ்வுகளை, நகைச்சுவையாய் தந்தமைக்கு நன்றி !

    இந்த மாதிரியான எளிமையான, காலத்திற்கு ஏற்றார் போல் உள்ள கவிதைகள் நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் ஐயமே இல்லை ! எப்போ பார்த்தாலும் காதல் கத்திரிக்காய் என்ற வட்டத்திற்குள் கவிதை இல்லாமல் இது போன்ற படைப்புக்கள் தொடர வேண்டும்.

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஆகட்டும் கபிலன், முடிந்தவரை சற்று வித்தியாசமான படைப்பைக் கொடுக்க முயற்சிக்கிறேன்.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே :)..

      Delete
  16. maranthitenkala akal.....

    oorla irukum pothu friends ellam mama,machan
    oora vitutitu vantha buddy,dude
    yeanna nankalum software engineer kooo......

    alzakiya padaipu....

    ReplyDelete