Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Sunday, 21 September 2014

காதலறிந்த கடலலை

கடற்கரை
மணலில்

உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்

உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ

கணநேர
மௌனத்திற்குப்
பிறகு

நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !


- அகல் 

Monday, 4 August 2014

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 26


***

உடல் நிலை
குன்றிய நிலையில் 
குளிர் பிரதேசத்தில் நான்

உள்மனதில்
அன்றொருநாள்
அம்மா சமைத்து
ஊட்டிய
சமையலின் வாசம்

***

அங்கே நீ
இங்கே நான்
இரு போர்வை
ஈருறக்கம்
கனவுகள் மட்டும்
ஒன்றாய்

***

நுணல் தன்
துணைதேடும்
மழைநாள்

வயல்வெளி
திருவிழாவாகிறது

***

ஒரு
மெழுகுவர்த்தியின்
முனையில்
உயிரை
மாய்த்துக்கொள்கிறது

உனக்காக
இதுவரை எழுதிய
எனது காதல்
கடிதங்கள்

***

உன்
பட்டுப் பாவடையில்
வண்ணத்துப் பூச்சி
இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்

***

இன்னும்
எழவில்லை
சூரியன்

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
சூரியகாந்தி

***

எதற்கு நீ
என்னைச் சுற்றுகிறாய்
என்று காரணம்
கேட்டபோதெல்லாம்

பூமி எதற்கு
தன்னைச் சுற்றுகிறது
என்று காரணம்
கேட்டவன் நீ

***

ஏக்கத்தோடு கூவும்
என் வீட்டு
வேப்பமரத்துக்
குயிலின் குரல்
அமெரிக்காவரை
கேட்கிறது

அம்மாவின்
கைபேசி வழியாக

***

கண்கள்
அறிந்திராத காதல்
காற்றுவழி
மகரந்தச் சேர்க்கை

***

உன் வீட்டு
ஜன்னல்
கதவுகளைச்
சாத்தி வைக்காதே

தென்றலாவது
தீண்டிவிட்டுப்
போகட்டும்

***

Thursday, 21 November 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 25

***

நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !

***

இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !

***

உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
 

***

இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !

***

மழை பெய்கிறது
உள்ளே வா 
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !

***

கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
 

***

ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்

செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !

***

அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி 
புண்முறுவலிடுகிறாய் நீ

வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !

***

ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து 
கொடுத்தாள் அம்மா

அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !


***

உன்னோடு 
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது

கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !

***

Thursday, 16 May 2013

காதல்

ஆலங்கட்டியை
அள்ளியிறைக்கும்
புயல்மழை காதல்

கார்மேகம் கூடியதும்
முகத்தைமுத்தமிடும்
ஒற்றை மழைத்துளி
காதல்

விரல்களை ஒடித்துவிட்டு
வீணைமீட்டும்
விபரீத விளையாட்டு
காதல்

தவறாக உச்சரிக்கும்
பிஞ்சு மழலையின்
கொஞ்சல்மொழி காதல்

மாமரக்கிளை நிழலில்
தொட்டிலில் உறங்கும்
குழந்தையை
கடித்து அழவைக்கும்
கட்டெறும்பு காதல்

அழும் குழந்தைக்கு
இரண்டு வயல் தாண்டி
காற்றில் கரைந்துவரும்
தாயின் தாலாட்டு காதல்

முட்களுக்கிடையே
மூச்சுத் திணறும்
மூங்கில்தண்டு காதல்

அதைத் துளையிட்டு
இசைமீட்டும்
புல்லாங்குழல் காதல்

சுள்ளென்று சுட்டெரிக்கும்
சூரியனும் காதல்

ஒளியைக்

கடன்வாங்கி குளிர்விக்கும்
முழுநிலவும் காதல் !

நாசி துளைத்து
மூச்சடைக்கும்
கூவம்நதி காதல்

அவ்வப்போது
வந்துபோகும்
மண்வாசம் காதல்

மயிலின் அழகும்
குயிலின் குரலும்
காதல்

குயிலின் அழகும்
மயிலின் குரலும்
காதல்

சேவல் கூவும் நேரத்தில்
புல்லோடு உறவாடும்
பனித்துளி காதல்

சில மொட்டவிழும்
நேரத்தில்
புன்னகையைப் பறித்துவிடும்
பூகம்பம் காதல்

பூமிக்கு

புதுவரவைத்தரும்
பிரசவவலி காதல்

புதுவரவை பார்த்தவுடன்
தாயின் விழிகளில்கசியும்
கண்ணீர்த்துளி காதல்

காதைக் கதறவைக்கும்
ரீமிக்ஸ் இசை காதல்

உயிரை உறையவைக்கும்
இளையராஜா இசை காதல் !


அன்புடன்,
அகல்

Wednesday, 13 February 2013

காதலர் தினமொன்று வேண்டும் !

ஒற்றை ரோஜா இதழ்கள்
மௌனமாகும் மொழி
பேசிக்கொள்ளும் விழிகள்
பிள்ளைமொழி சினுங்கலோடு
காதலர் தினமொன்று வேண்டும்

எளிமையான அன்பு
இலக்கணமில்லாத காதல்
புன்னகை குறையாமல் பாசம்
அறைகளைத் தேடாத நேசத்தொடு
காதலர் தினமொன்று வேண்டும்

அலைகள் வீசும் கடற்கரை
ஆட்கள் நிறைந்த மணல்மேடு
அவர்கள் முகம் சுளிக்காத வகையில் - விரல்
முத்தங்களோடு முடிந்துபோகும்
காதலர் தினமொன்று வேண்டும்

மனதில் நிற்கும் மதிய உணவு
மாற்றிக்கொள்ளும் எச்சில் இனிப்பு 
விடைதர முடியாத தருணம்

பக்கத்தில் பரிசுப்பொருள் 
அதன் விலைபாராத காதலியோடு
காதலர் தினமொன்று வேண்டும்

சொல்லாத காதல்
சொல்லியுரைக்கும் போதும்
மிகையில்ல வார்த்தைகள் கொண்டு
மனதை சிறைபிடிக்கும் வித்தைகள் கண்ட 
காதலர் தினமொன்று வேண்டும்

வேர்களற்ற காரணம்
விரிசலுற்ற காதல்
போலிவேஷம் களைத்துவிட்டு 
புத்துயிர்பெரும் பொழுதோடு
காதலர் தினமொன்று வேண்டும்

சாதி மதம் கடந்து
ஒன்றில் ஒன்றாய் கலந்து
வாழத்துடிக்கும் வயதில்
பெற்றவரின் பிடிவாதத்தால்
பிணமாகாத காதலர்களோடு
காதலர் தினமொன்று வேண்டும்

நாகரிக வளர்ச்சியால்
நள்ளிரவு நிகழ்ச்சி போனாலும்
கற்பழிப்பு வழக்கில்லாத
காதலர் தினமொன்று வேண்டும்

இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,

அகல் 



Monday, 24 December 2012

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

பனித்துளிகள் சுற்றிவந்து
திரையிட்டது உனக்கு - இனி
பாசமுடன் முத்தமிட
தடையில்லை எனக்கு

அறைக்குள்ளே முழுநிலவாய்
அனுதினமும் இருந்தாய் - அந்த
பிறைநிலவும் ஜன்னல்வழி
எட்டிப்பார்ப்பதை யறிந்தாய்

முகப்பருவில் முத்தமிட்டு
மோட்சம் கண்டது விரல்கள் - உன்
அகம் கண்டு புறம் உண்டு
அன்பு கொண்டது விழிகள்

இமைரெண்டும் மூடிஎனை
இதழோடு இணைத்தாய் - நிதம்
பகலிரவு பாராது
பாசத்தாலே சிதைத்தாய் - உன்

உடைகளைய, இடைதெரிய
வெட்கம் கொண்டது விரல்கள் - இதை
அறிந்து உன்மேல் ஆசைகொண்டு
விழித்துக் கொண்டது சுவர்கள் - ஏவாள்

ஒரு பழத்தை ஊட்டிவிட்டு
மாற்றிவிட்டாள் உலகை - இங்கே
இரண்டு கையில் இருக்கையிலே
யார் சொல்வார் பதிலை ..!




Saturday, 3 November 2012

அவனோடு அந்த ஒரு நாள் - அவளின் அனுபவம்

அந்த நாள்...

அவன் எனக்கு மாலையிட்டு
மெட்டியிட்ட நாள்..

அதிகாலை ஆறு மணி,
கார் கிளம்பியது...

அவன் போவதைத்
தவிர்க்கச் சொல்லி,
கண்களும் இமைகளும்
என்னோடு சண்டையிட,

என் இதயமோ இதழுக்குத்
தடை போட்டது..
அந்த நாள் அவன் ஆஜர்
அலுவலகதிற்கு தேவை
என்பதை அறிந்து..

நேரம் நிதானமாய் நகர்ந்தது..

கடிகாரத்தில்,
ஆமை போல்
நகர்ந்த அந்த அரை முள்,
ஐந்து மணியைக் காட்டியது..

நான் செய்த அந்த கால்(call)
சோதனைக்கு அனுப்ப பட்ட
செயற்கைக் கொள் போல,

ஆறாவது முறையும்
அவன் எடுக்காமல்
தோல்வியைத் தழுவியது..

ஐந்து நிமிடத்தில் ஒரு
sms செய்தி...
I love you என்று..

நெஞ்சம் நம்ப மறுத்தது.
என் இதயத் துடிப்பின் ஓசை
இருபது மடங்கானது.
ஏன், எதிர் வீட்டிற்கே
கேட்டிருக்கும்...

பரீட்சை தாளை பதட்டத்தோடு
சரிசெய்யும் மாணவன் போல...
என் விழிகள் சண்டையிட்டுக் கொண்டு
அந்த செய்தியை பல முறை சரிபார்த்தது..

காதலித்த நாள் முதல்
இப்படி அவன் சொல்வது
இது மூன்றாவது முறை..

ஆனால், அதைக் கொண்டு வந்து
கொடுத்த மொபைலுக்கு கொடுத்தேன்
முன்னூறு முத்தங்கள்..

அப்படி அவன்
சொன்னதாலோ என்னோவோ
காய்ச்சல் கொஞ்சம் தொத்தியது..

சற்று நேரத்தில்..
கார் ஹாரன் கத்தியது..

உள்ளே வந்தான்
உடை களைந்தான்
பசி கொண்டான்
பலகாரம் உண்டான்..

மணி பத்தானது...

மழைத் துளியை மணந்த
இலையைக் காட்டிலும்,
பனித்துளி படர்ந்த இலை
அழகல்லவா..?

அது போல,
தங்க மெட்டியை தாங்கினாலும்,
என் விரல்களுக்கு வெள்ளி
மெட்டியே விருப்ப மென்று,
எனக்கு மட்டுமே தெரிந்த செய்தி
இவனுக்கும் எப்படி தெரிந்ததோ..!?

அவன் கைகள்
என் பாதத்தைப் பற்றிட,
தங்க மெட்டியைக்
களைந்த விரல்கள்,
வெள்ளி மெட்டியைத் தழுவியது...

என் உள்ளம் உணர்ந்தது
திருமண நாளன்று
அவனோடு மற்றுமொரு
திருமணம்..
ஒரு "திருமணப் பரிசாய்..!"

என் கண்கள்
அவனுக்கு கட்டளையிட,
அவன் கைகள் என்னைக்
கட்டிலில் இட்டது...
காட்சி முடிந்தது.
காய்ச்சலும் குறைந்தது..

பின்பு, சிறிதொரு உறக்கம்
சிறு பிள்ளை போல..

நடு இரவு நகர்ந்து
நான்கு மணியானது...

காதல் விளையாட்டில்,
என் இடை நழுவிய உடையை
அவன் இமைகள் கண்டு
சரி செய்ய...

அவன் இதழ்கள் இரண்டும்,
இதமான வெப்பத்தால்
இம்மி யளவு முத்தமிட,

திறக்காத என் கண்கள்
திகைத்துப் போய்
வெட்கப்பட்டது...
இருந்தும் அதையே
வேண்டுமென்றது..

முத்த விசயத்தில்
இவன் ஒரு முதலாளி..
அளவாகத்தான் கொடுப்பன்.
ஆனாலும் கொஞ்சம்
அழகாகக் கொடுப்பான்..

இந்த அழகான உணர்வு
அகலும் முன்னே..
நெஞ்சுக் குழியில்
முகம் பதித்து - என்
பிஞ்சுக் குழந்தை யானான்..

அப்படியே அவனை
அனைத்துக் கொண்டது
என் கைகள்..
அதன் பின்,
அசர மறந்தது
என் கண்கள்..

இருட்டில் பரிமாறிய
இந்த அன்பைக் காண,
சூரியனும் விளக் கெடுத்தான்,
பொழுதும் விடிந்தது..

அம்மா சத்தமிட்டு எழுப்பினாள்,
அந்த "அதிகாலைக் கனவு"
அத்தோடு முடிந்தது..!

Saturday, 27 October 2012

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் நண்பர்களே..

ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது

போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே....

Tuesday, 16 October 2012

அந்த முத்தம் போல் இல்லையடி

உன் தந்தைக்கு பயந்து
தாயை சமாளித்து
தம்பியிடம் பொய் சொல்லி
ஐநூறு மயில்களுக்கு
அப்பால் இருந்து

பட்டும் படாமல்....

அந்த நள்ளிரவில் தந்த
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..

இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!

Saturday, 13 October 2012

முதல் காதல், முடியாத அத்யாயம்

மாலை 3 மணி...

இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள் 
ப்ராஜெக்ட் வேண்டுமென..

அடித்து பிடித்து முடித்து கொடுத்து

அண்ணாந்து பார்த்தேன்...

இந்த முறை,

ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன 
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..

சில அடிகள் அளந்து 

வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...

அடுத்தவனை நம்பாதே என 

அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..

பதினைந்தாவது மாடியிலிருந்து

பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..

களைப்பில், கண்கள் சொல்வதை

கால்கள் கவனிப்பதா யில்லை...

முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..


வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,

பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...

பயணத்தை தொடர்ந்தேன்..


வழியில்...


ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல

இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...

பூங்காவில் சில பூக்கள்

புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..

பனித்துளி சில மலைதுளியாகி

என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...

திடீரென.. 

எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..

கண்ணுக் கெட்டும் தூரத்தில்,

காரிருள் நிறத்தில், 
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..

தடம் புரண்ட தண்டவாளமாய்

தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...

சில நொடிகளில் கண்டேன்...


பாதி நினைவில்.,

கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..

நினை விழந்த மழலையாய்,

உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...

இதை கண்கள் கண்டதும்,

என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...

உதவி வேண்டி உரக்கக்

கத்தினேன்...

கேட்க ஆள் எவருமின்றி

கேட்டது எனக்கு மட்டும்...

மனம் புயலுக்குள் சிக்கிய

பூவாய் தவிக்க,

ஆம்புலன்ஸ் என்னைத் தேடி

என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..

அரை மணி நேரத்தில்

வண்டியும் வந்தது..

ஒருபுற படுக்கையில் அவன்.

மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...

சுத்தமான காற்று இருந்தும்,

அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...

தலை சற்று சருக்கவே,

அவளை தாங்கிக்கொள்ள 
மடி கொடுத்தேன்...

சைரன் பறந்தது...


பௌர்ணமி நாளில்

மடியில் ஒரு நிலவு...

அந்த நிலவிற்கு துணை

கோளாய் நெற்றிப் பொட்டு..

சண்டையிட்டுக் கொள்ளாத,

இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..

அடர்ந்த காட்டுக்குள்,

அரவணைக்கும் 
ஒற்றையடிப் பாதையாய்
அவள் உச்சந்தலை வகிடு..

அதைப்
 பாதுகாக்கும் பூட்டாய்
நெற்றியில் ஒரு பொட்டு...

பூக்கடையில், பூவிற்கு 

தெளிக்கப் பட்ட தண்ணீராய் 
வியர்வைத் துளி..

குயிலின் நிறத்தில்,

மின்னும் மயில் தோகையின் 
நீளத்தில் கூந்தல்..!

இந்த காட்சிகள் என் கடந்த கால

காதலை கண்ணில் காட்டியது..

என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..

Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..

அவள் அதைச் சொன்னதும்,

வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக் 
கொள்ள வில்லை...

உளி அடித்து பிறந்த வழியை,

சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?

உண்மையைச் சொன்னால்...


என் காதல் காவிரியாகவும்,

அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..

அது,

திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.

அடுத்தவன் காதலியை

கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என 
அம்பியிடம் கேட்டு, 
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..

ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற

அவள் மீதி ஏனோ 
துளியளவும் துயர மில்லை...

ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே

என அருகில் இருந்த அவன் 
எட்டாவது முறையாக கேட்க,

நிகழ் காலத்திற்கு

நினைவுகள் திரும்பியது..

கட்டிய மனைவியை பற்றி

இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..

என் விரலில் ஏதோ ஊறுவதாய்

அறிந்து உற்று நோக்கினேன்..

அவள் தலையில் ரத்தம் கசிய,

அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..

கருவேலங் காட்டு சில் வண்டின்

சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.

அவள் உயிரைக் காக்க 

அவர்கள் ரத்தம் கேட்க...

ஒரு பாவமும் அறியாத 

எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..

மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..


நான் வேண்டியவர்களுக்கு 

சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..

வீடு என்னை வரவழைத்தது.

கட்டில் ஒரு கை கொடுத்தது..

அன்று அந்த பூங்காவில்...


BYE என்று சொல்லி - என்

உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம் 
ஓடிக் கொண்டிருகிறது..

என் ஒவ்வொரு செல்களிலும்

இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...

கதவை மூடியது விழிகள்

வழிந்து விழுந்தது சில துளிகள்..

இது என் முதல் காதல்,

முடியாத அத்யாயம்..!

Thursday, 11 October 2012

இது போதும் எனக்கு...

அடை மழையில் 
சிறு குடைக்குள் 
அன்பாக நீ 
அணைக்க நான். 
இது போதும் எனக்கு..! 

பனிபடர்ந்த மாலை நேரம் 
பதமான குளிர் 
நடை பாதைப் பயணம் 
என் வலது கையில் நீ 
உன் இடது கையில் நான். 
இது போதும் எனக்கு..! 

காஞ்சிவரப்பட்டு 
கண்ணாடி வளையல் 
கழுத்தோரம் கருகமணி 
மனம்மயக்கும் மதுரை மல்லி 
வெள்ளிக் கொலுசு 
அடி நெற்றியில் குங்குமம் 
அதற்குமேலே சந்தனம் 
பகலில் இதை அணிய நீ 
இரவில் அதை களைய நான். 
இது போதும் எனக்கு..! 

அதிகாலை நேரம் 
ஆவி பறக்கும் காபி 
அழுக்கு வாயால் உனக்கோர் முத்தம் 
அதை அதட்டும் உன் இதழ்கள். 
இது போதும் எனக்கு..! 

நாம் கொண்ட அன்பு 
அதில் நீ கொண்ட தாய்மை 
தாய்மை நாளின் தவிப்பு 
உன் மாலை நேர களைப்பு 
மெட்டியிட்ட உன் விரல்கள் 
அதில் நெட்டி எடுக்க நான். 
இது போதும் எனக்கு..! 

உன்கையில் ஒருபிடி சோறு 
நெற்றியில் தரும் ஒற்றை முத்தம் 
சுகத்தில் சாய உன் மடி 
சோகத்தில் சாய உன் மார்பு 
இது போதும் எனக்கு..! 

மாலை நேரம்
திறந்த புல்வெளி 
தலை கோதும் உன் விரல்கள் 
உன் மடியில் நான். 
இது போதும் எனக்கு..! 

நவம்பர் மாத நடுக்கம் 
ராத்திரி நேர உறக்கம் 
நடு இரவில் விழிப்பு 
என் நெஞ்சுக்குள் நீ. 
இது போதும் எனக்கு..!


குறிப்பு: "இதுபோதும் எனக்கு"  எனும் வைரமுத்து அவர்களின் கவிதையின் தாக்கத்தில் நான் எழுதிய வரிகள் இவை. தலைப்பைத்தவிர அனைத்துவரிகளும் எனது கற்பனையே..!

Wednesday, 10 October 2012

காதலித்துப்பார் - இதில் ஒன்றேனும் நடக்கும்

அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்

நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகடிக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்

என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்

கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்

காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!

இதழ்களில் குழப்பம்

உனது இதழை...

அந்த ரோஜா
இதழிலிருந்து - சற்றுத்
தூரத் தள்ளித்தான்
வையேன்...

எது அசல் என்று
எக்கச்சக்க குழப்பம்..!

Tuesday, 9 October 2012

இது காதல் திருவிழா

கட்டிலில் அரங்கேறும்
கச்சேரிக்கு,

வளையலும் கொலுசும்
பின்னணி இசை வாசிக்க

பார்வையாளர்களாய்..,

மெட்டியும்
நெற்றிச் சுட்டியும்..!

Monday, 8 October 2012

மரத்தடியில் நான்

இமைகள் மூடிய
என் கருவிழிகள்
உன் நினைவுகளோடு
உறவாடிக்
கொண்டிருக்கையில்

தட்டி எழுப்புகிறது...

நேற்று பெய்த
மழையில்

இன்றுவரை
இலைகளோடு
உறவாடிய
மழைத்துளி...!

Sunday, 7 October 2012

என் காதலை உணர்ந்த கணம்

எனது புத்தகத்தில்...

மயில் இறகிற்கு மட்டுமே
சொந்தமான இடத்தை - என்று

உன் கூந்தலைப் பிரிந்த 
ஒற்றை முடி விலைக்கு
வாங்கியதோ,
அன்று உணர்தேன்...

நான் உன்னைக் காதலிப்பதாக..!

Saturday, 6 October 2012

எதார்த்தம்

காதல் : -
ஹார்மோன்கள்
செய்யும்
கலவரம்...

காமம் :-
அதன்
பயங்கரவாதம்...

Friday, 5 October 2012

காதலும் பிரிவும்

மழைத்துளியும்
மர இலையும்
காதல் கொண்டு
உறவாடுகையில்

அடித்துப் பிரிக்கிறது
காற்று..!

Photography By: அகல்
Better Quality Picture at : http://www.flickr.com/photos/61303607@N06/6300828433/in/photostream/

Thursday, 4 October 2012

அவளுக்கு இணையான அழகைத்தேடி

ஊரில் உள்ள
கவிகள் எல்லாம்

உன்னை
நிலவோடு சேர்த்து
வர்ணிக்கிறார்கள்...

நான் இன்னும் ஒரு
அழகான கிரகத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன்..!

இது கிராமத்து காதல்

ஒரு கிராமத்து காதலி, தனது காதலனை காண வருவதாய் சொல்லிவிட்டு வர இயலாத காரணத்தையும், அவன் மீது அவள் கொண்ட அழமான அன்பினையும் அவளது வழக்கு மொழியிலேயே வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டது. கிராமத்து வழக்குமொழியில் எனது முதல் கவிதை.

ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
காத்து கெடப்பீக
கண்சிமிட்ட மறப்பீக..

தூது சொல்ல ஆளுமில்ல
தோழி இப்ப பக்க மில்ல..
சேதி சொல்லுஞ் சின்னப் புள்ள(தங்கை)
எதிரியானா என் அப்பன் சொல்ல..

இப்ப, செங்காத்தும் வீசுதய்யா
உம் செவி சாச்சு கேளுமய்யா,
பொச கெட்ட இவ மனசில்
புயலடிக்கும் சேதி சொல்லும்..

உயிரோட உயிர் சேந்து
உன் கூட வாழுரப்ப,
புரியாத என் அப்பன்
புது வரன கூட்டி வந்தான்..

அவன்,
அரும்பு மீசைக்காரன்
ஆளு ரொம்ப கெட்டிக்காரன்
ஜல்லிக்கட்டு காளனாலும்
மல்லுக் கட்டும் வீரனவன்

மிடுக்கான பார்வையிலே
மீன் கொத்தும் தூண்டி லவன்
சொடுக்கு போட்டதுமே
சொர்க்கங் காட்டும் சொத்துக் காரன்,
இப்படித் தான் சொல்லுறாக
என் ஊரில் எல்லாரும்...

ஆனா
நீர் காலையில கலப்ப கட்டி
காணி யெல்லாம் உழுது புட்டு,
களச்சு போன உமக்கு கொஞ்சம்
கம்மக் கூழு குடுக்குரப்ப..,

ஒரு வாயி ஊட்டி விட்டு
உசுர கொள்ளும் உன் அன்ப,
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
கொடுப்பானா இவஞ்சொல்லு..?

என் கண்ணெதிரே நிக்கிறவன்
கருங் கல்லா தெரியி றான்யா.
கண்ணுக் கெட்டா தூரத்துல
காத்துகிட்டு நீ இருந்தும்,
என் கண்டாங்கி சேலையாகி
என்னக் கட்டிக்கிட்டு நிக்கிரய்யா..

பொழுது நல்லா சாஞ்சு போச்சு
திரி விளக்கும் ஏத்தியாச்சு.
தூது சொல்ல ஆளில்லா
துரதிஷ்ட வதி யானே.

நல்லாப் போய் தூங்கு மைய்யா
நாள வந்து பாப்பே னய்யா..
இப்ப, தூக்கம் வந்து சொக்கியதும்
சொப்பனத்தில் சேர்வோமய்யா..!