***
நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !
தவிக்கும் இரவு
அமாவாசை !
***
இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !
***
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
***
இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !
***
மழை பெய்கிறது
உள்ளே வா
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !
உள்ளே வா
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !
***
கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
***
ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்
செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்
செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !
***
அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி
புண்முறுவலிடுகிறாய் நீ
வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி
புண்முறுவலிடுகிறாய் நீ
வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !
***
ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து
கொடுத்தாள் அம்மா
அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !
***
உன்னோடு
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது
கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !
***
ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து
கொடுத்தாள் அம்மா
அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !
***
உன்னோடு
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது
கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !
***
அனைத்தும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
(நீண்ட நாட்கள் கழித்து....?)
ஆமாங்க தனபாலன் சார்.. பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு... அமெரிக்காவின் ஒரு மூலையில வேலை, சமையல் அப்டின்னு நேரமில்லாம போயிட்டு இருக்கு.. நன்றி சார்...
Deleteவணக்கம்
ReplyDeleteமனதை கவர்ந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்...
Deleteகவிதைகள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாங்க குமார் சார்.. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
Deleteநல்ல சுவையான காதல் கவிதைகள். அடிக்கடி எழுதுங்கள். அமெரிக்காவில் இருப்பது எங்கே? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை( சில மாதம் நியூ ஜெர்சி)
ReplyDeleteமிக்க நன்றி சார்.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .. இப்போது சாண்டியாகோவில் இருக்கேன்...
Delete