Saturday, 21 December 2013

என்னை மன்னிப்பாயாக...

எத்தனைப் பேரக்குழந்தைகள் இருந்தும் என்மீது உயிரையே வைத்திருந்தாய். விவரம் தெரிந்த நாள் முதல் பொத்திப் பொத்தி வளர்த்தாய். வீட்டிற்குப் போகும்போதும் வரும்போதும் என் கண்ணுகுல்லையே இருக்கற சாமி என்று சொல்லி கட்டிபிடித்து சில துளி கண்ணீர் வடிக்காமல் நீ இருந்ததில்லை.

நீ எனக்கு அருகே இருந்தால் பத்துபேர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும் என்று சொல்வாய். இது எனக்கும் அவளுக்குமான பந்தம். இந்த பந்தத்தை உயிர்பித்துக் கொண்டு சில மணி நேரத்திற்கு முன்வரை உயிரோடு இருந்தாள். இப்போது இல்லை. அவளின் கடைசி நிமிடங்களில் அவளது கண்கள் என் முகம் பார்க்க ஏங்கி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எனது செல்லப் பேரனின் திருமணத்தைப் பார்த்துவிட்டால் நிம்மதியாகப் போய்விடுவேன் என்று எப்போதும் சொல்வாள். 80 வருடங்களுக்கு மேலாக இருந்தவளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்க முடியாமல் பாதகத்தி என் பாட்டி போய்ச் சேர்ந்துவிட்டாள்.

எனது தந்தைக்கும் அவரது தாயிக்குமான 55 வருட உறவை, அவர் பேசியபோது தடுமாறி விழுந்த வார்த்தைகளில் புரிந்துகொள்ள முடிந்தது.

எந்தனை நாள் அவளோடு பேசி இருப்பேன். அவளின் கரம்பிடித்து எத்தனை நாள் நடந்திருப்பேன். அவள் எனக்காக எத்தனை நாள் உழைத்திருப்பாள், தூக்கம் கலைத்திருப்பாள். நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது.

வேலைக்காக பெங்களூர் போனாய் பிறகு ஹைதராபாத் போனாய் இப்போது அமெரிக்கா போகிறாய் நான் இறந்துபோனால் எங்கு வரப்போகிறாய் என்று சொல்லியவளின் வாக்கு பலித்துவிட்டது. என்னால் உன்னைப் பார்க்க வரமுடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் காலம் என்னை அண்ணனிடம் இருந்து பிரித்தது இப்போது உன்னிடம் இருந்து பிரித்துவிட்டது.

உறவுகளுக்காக நாடுவிட்டு நாடு வந்து உழைத்து என்ன பயன்
 ? இது போன்ற தருணங்களில் நான்கு சுவரிற்கு நடுவே அழ மட்டுமே முடிகிறது என்றெண்ணும்போது வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தெரிகிறது.

நீ பாட்டியாக இல்லை... என் தாயாகவும் இருந்தாய்... இன்று உனது மூச்சு உலகை விட்டுப் பிரிந்துவிட்டது. இருந்தும் எனது இறுதி மூச்சுவரை உனது நினைவுகளோடு நான் இருப்பேன். உனது இறுதி ஊர்வலத்தில் இல்லாமல் இருக்கப்போகும் இந்த இயலாத பேரனை தயவு செய்து மன்னிப்பாயாக என் தாயே.

4 comments:

  1. வணக்கம்
    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் மனதை நெகிழவைத்த விட்டது...வாழ்த்துக்கள்
    இதைய மாதரியான கருத்தை வைத்து (நெஞ்சை தழுவிய நினைவுகள்) என்ற சிறுகதை எழுதியுள்ளேன் பாருங்கள்....https://2008rupan.wordpress.com.
    http://tamilkkavitaikalcom.blogspot.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இதயத்தைக் குடைந்து கண்ணீர்க் கடலில் குளிக்க
    வைத்தது எமது இருப்பை உண்மை நிலவரத்தைக்
    கண்முன் நிறுத்திய சிறப்பான பகிர்வு .உங்களுக்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete