Wednesday, 30 January 2013

நீ சரித்திரம் உடைத்தால், இவன் சரித்திரம் படைப்பான் !

வந்தாரை வாழவைப்பாய் - நீ
உள்ளோரை வீழவைப்பாய்
பெயர் கேட்டால் தமிழன் என்பாய்

அறிவிலியாய் இருந்தால் உனக்கு
அறியச்செய்யலாம் - நீ
கருவிழியைத் திறக்கவில்லை என்ன செய்ய ?

உன் அரசியல் ஆட்டம் ஐந்து வருடம் - இவனைப்
பின்தொடரும் கூட்டத்தை யார் திருடும் ?

விடியாத இரவுமில்லை
வீழாமல் எவருமில்லை
முட்டாத விதை முளைப்பதில்லை
எட்டாமல் கனி சுவைப்பதில்லை

தலைக்கனத்தில் ஒருவன் ஜெயித்ததில்லை
தன்னம்பிக்கையால் எவனும் தோற்றதில்லை

சிலர் மனிதன் தோற்றுவித்த மதம் பார்க்கிறார் - இவன்
மதம் பிடிக்காத மனிதத்தைப் பார்க்கிறான்

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்
மனிதவெறி கொண்டவனிடம் சிலர் மதவெறி செல்லாது

காலம் காலத்தைத் தோற்கடிக்கலாம்
கலையை யாரடா தோற்கடிப்பது ?

இவன் மனிதத்தைக் கொண்டவன்
மதத்தை வென்றவன் !

ஒரு சமாதானப் புறாவை - நீ
சாகடிக்கப் பார்க்கிறாய்

இவன் வீழ்ந்து மறைந்தால் - முற்றிலும்
இறந்ததாய்க் கொள்ளாதே !

மாலையில் மலையோரம் வீழ்ந்த சூரியன்
காலையில் கடலோரம் எழுவதை அறியாயோ ..?

அருகம்புல் விதைக்கு ஏதடா அழிவு ?

மனிதம் உயர்ந்தால் மதங்களும் வாழும்
அதுவே இறந்தால் யாவுமே வீழும் !

"மதங்கள் சாகட்டும் மனிதம் வாழட்டும்"

ஜெய்ஹிந்த் !

கமல் என்ற ஒப்பற்ற கலைஞனுக்கு கனத்த மனதுடன் காணிக்கையாக்குகிறேன் !




13 comments:

  1. அருமையான அர்ப்பணிப்பு !

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஸ்ரவாணி அவர்களே...

      Delete
  2. அருமையான கவிதை
    எங்கள் அனைவரின் மன நிலையை
    மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் கவிதை
    மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ரமணி ஐயா ...

      Delete
  3. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ...

      Delete
  4. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்

      Delete
  5. கவலைபடாதே நண்பா. நிச்சயமாக இந்த படத்தை தமிழ்நாட்டிலேயே பார்போம். எதிர் பவர்களுக்கு எலக்ஷனில் பாடம் கற்பிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நண்பா.. நல்ல கருத்தைச் சொல்லும் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் ...

      Delete
  6. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ் ...

      Delete