அப்பாவிகள்
கூடுகட்டி
இன்று
முட்டையிடும்
குருவிகளுக்கு
தெரியவில்லை
நாளை அறுவடை
தினமென்று !
ஈழம்
அரசியல்
துப்பாக்கிகள்
சுயநலவாத
தோட்டாக்களால்
குரல்வளை நெரிக்கப்பட்டு
ரத்தம் வடிக்கிறது
ஈழம் !
காதல் மொழி
உச்சி வெயில்
மக்கள் நெருக்கம் நிறைந்த சந்தை
வேர்த்துக் கொட்டும் வெக்கை
மரங்களற்ற சாலைப் பகுதியில்
நடைபோகும்போது
பட்டும்படாமல்
சாமரம் வீசிவிட்டுப் போகும்
விலாசம் தொலைத்த
இலவம் பஞ்சின் நுனியில் இருக்கிறது
இயற்கையின் காதல் மொழி !
புரிதல்
நாகரீக வளர்ச்சி என்பது
ஆடையின் அளவை
குறைத்துக் கொள்வதல்ல..
சிந்தனையின் அளவை
நாயகன்
நான்கு சுவருக்குள்
நங்கையின் கைகளுக்குள்
கண் கவர் கள்வனாக
கட்டிய கணவனாக
குட்டிக் குழந்தையாக
மாறுகிறது...
டெட்டி பியர் !
அறிகுறி
சுத்தமான காற்று இருந்தும்
சுவாசக் காற்று
தேவைப்படுமானால்
ஒன்று
நோய் பிடித்திருக்கும்
இல்லை
காதல் நோய் பிடித்திருக்கும் !
கள்வன்
நாம் குடைக்கடியே
அமர்ந்து பேசும்
காதல் மொழியை
குடைக்கு மேலிருந்து
ஒட்டுக் கேட்கிறது
ஒரு பட்டாம்பூச்சி !
நீதியற்ற நியதி
பல கன்றுக்குட்டிகளின்
பசி நிறைந்து கிடக்கிறது
நாம் பசியாறும் பாலில் !
அழகு
பட்டாம்பூச்சி
பிடித்துவிட்ட விரல்களில்ரங்கோலிக் கோலம் !
அம்மா
தவறு செய்யும் பையன்
தண்டிக்கத் துரத்தும் அப்பா
குறுக்கே புகுந்து போராடும் அம்மா
அப்பா அடித்த அடியை
தன்மீது வாங்கிக்கொண்டு
"நீங்க அடிச்ச அடில
பையன் எப்டி அழுறான் பாருங்க"
என்று சொல்லும் தாய்
உள்ளவரை...
ஆயிரம் சீற்றம் வந்தாலும்
இவ்வுலகம் அழியப்போவதில்லை !
அன்புடன்,
அகல்
அகல்
குட்டிக் கவிதைகள் சொன்னதென்னவோ உண்மைகள்
ReplyDeleteகருத்திற்கு நன்றி கண்ணதாசன் சார்...
Deleteவாவ் எல்லா கவிதைகளும் அருமை நண்பா
ReplyDeleteநாடி கவிதைகள்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பாஸ்..
Deleteஅனைத்துக் கவிதைகளும் அருமை அகல்.
ReplyDelete“அம்மா“ மிக அருமை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி அருணா..
Deleteஅனைத்தும் அருமை... மிகவும் பிடித்தவை :
ReplyDeleteபுரிதல்...
நீதியற்ற நியதி...
தொடர வாழ்த்துக்கள்...
கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்..
Deleteella kavithaigalum super..
Deleteநாயகன்,நீதியற்ற நியதி lovely..
மிக்க நன்றி தேன்மொழி...
DeleteAnaithum arumai nanbarey...
ReplyDeleteAnaithum arumai nanbarey...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
DeleteFrom this i like mostly kandrukutty hikoo .it was real one.
ReplyDeleteThanks boss :)
Deleteநாயகன்,நீதியற்ற நியதி irandum arumai.....
ReplyDeleteamma anupavathil vantha kavithai pola ulathu.....super....
but purithal mattum pidikala....yenna nenka yapavum penkalin nakarikathai mattum sutti katurathu mathiri iruku(othukiren 100 %)...aankalum nakarikam yantra payaril podum aadai alzakai nenkalum parthiruperkal alava??