ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"
திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...
"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
[இந்த கூற்று, பணம்/வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]
அன்புடன்,
அகல்
Expectations irukalam ana idhu romba adhigama iruku..
ReplyDelete"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
super correct ah sonnenga :-)
Thanks Thenmozhi....
Deleteஅடக் கொடுமையே...!
ReplyDeleteஅவளின் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள்...?
என்ன சார் பண்ண :(
Deleteஅந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்தால் அவர் இப்படிக் கேட்பது தவறில்லையே. மேலும் அந்த விளம்பரத்தை பெண்ணே கொடுத்திருப்பார் என்பதும் தெரியாது.
ReplyDeleteஎத்தனை வசதியாக இருந்தாலும், ஒரு வரனின் குண நலன்களைப் பற்ற சிறிதும் சிந்திக்காமல் அப்பட்டமாக இப்படி கூறியிருப்பது பணத்தின் மீது உள்ள மோகத்தையே காட்டுகிறது... ஒரு நல்ல திருமண வாழ்க்கையை பணம் மட்டுமே தீர்மானித்துவிடாது... அவ்வாறு வேண்டுகோள் வைத்தவர் அந்தப் பெண்ணே, ஏனென்றால் "Profile created for self" என்றே குறிப்பிடப் பட்டிருந்தது...
Delete//உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"// correct ah sonenka sir...
ReplyDeletepanam thevai than aanal paname valkai alla.... puriyamalae valkai amaikirarkal..ooriru matham alathu varudathil pirinthum vidukirarkal...
at-last well said sir..solama vitiruvenkalo nu ninachen(boys u than)... thanks......bcz now a days all are asking "good looking boy/girl,rich family" :( (no character analysis)
Ya thanks....
Deleteமனங்கள் ஒன்று சேர்ந்தால் போதுமா?? என்று சொத்தையான காரணத்தை சொல்லுவார்கள்,
ReplyDeleteநல்ல வேலை அவர்கள் பணி செய்யவில்லை...! நோயாளிகள் பாடு, படு திண்டாட்டம் தான்
ஹா ஹா.. நல்லா சொன்னிங்க பாஸ்...
Delete