Thursday, 4 July 2013

தருமபுரி இளவரசன் செத்தான்.. சாதியம் ஜெயித்தது...

சாதிவெறிபிடித்த
பஞ்சப் பரதேசிகளே

சாதிய போதையை
குருதியில் குதிரைபோல்
ஓடவிடும்
அயோக்கிய ஆசாமிகளே


தருமபுரி இளவரசன் செத்தான்

இப்போது சொல்லுங்கள்
உங்கள் சாதியால்
நீங்கள் சாதிச்சது என்ன ?

பல கிராமத்தை எரித்ததும்
ஒரு உன்னதமான
காதலைப் பிரித்ததும்தானே

முண்டாசுக் கவிஞனே

முறுக்கு மீசைக்காரனே 
சாதிகள் இல்லையடி பாரதியே
மன்னித்துக்கொள்

நீ பிறந்த மண்ணில்
மீண்டுமொருமுறை
சாதியம் ஜெயித்தது


சாதியால் கட்டுண்ட கயவர்களே

ஈயிக்கும் இணையற்ற ஈனர்களே
இளவரசன் பாடை ஏறினான்
அவன் இறந்தும் வாழ்வான்

ஆனால்
நீங்கள் இருந்தும்

அழுகிப்போன
பிணத்திற்குச் சமம் !


கனத்த மனதுடன்,
அகல்

17 comments:

  1. இளவரசன் ஆன்மா என்ன சேய்யும்? கதறுமா? பழிவாங்குமா? இல்லை நிம்மதியா இருக்குமா?!

    ReplyDelete
    Replies
    1. இதே கேள்வுதான் எனக்குள்ளும் இருக்குதுங்க ராஜி...

      Delete
  2. namum antha setha pinankalai pola vala vendam..mudintha alavu muyalvom jaathi ilatha yathirkalam amaiya :( avar anma santhiyadaiya kadavulai vendukiren :(

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவரும் மாறினால் மாற்றம் வரும்...

      Delete
  3. சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

    ReplyDelete
    Replies
    1. மேல் சாதி கீழ்சாதி என்று அடித்துகொல்வது பத்தாமல், பஞ்சாப்பிலிருந்து வந்த சிங்கைஎல்லாம் பெட்ரோல் குண்டுவீசிக் கொள்கிறார்கள் இந்த தரம் கேட்ட மடையர்கள் நண்பரே... மிகவும் வேதனையாக இருக்கிறது...

      Delete
  4. Kaadhalichanga... Avanga rendu perum kalyanam panikitanga .. prachanai iruku... avangalukkum avanga kudumbathukkum... Kaalapookil adhu seriyaga koodum.. Aana indha ******** galal ippo maara vadu.. Iniyum andha pennaiyum avanga ammavayum indha oorlaye iruka vacha rombave aabathudhan...

    ReplyDelete
    Replies
    1. // Iniyum andha pennaiyum avanga ammavayum indha oorlaye iruka vacha rombave aabathudhan... // True Palikkup pali nadakkum...

      Delete
  5. முற்றிலும் உண்மை நண்பரே...

    ReplyDelete
  6. மிகவும் வேதனையாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய... திரையில் ஒரு இளவரசன். திரைமறைவில் எத்தனையோ தனபாலன் சார்..

      Delete
  7. உண்மை தான் நண்பர் தருமபுரி இளவரசன் செத்தான்.சாதியம் ஜெயித்தது. ஜாதி வெறியர்கள் ஜெயித்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜாதிய அரசியல்வாதிகள் இருக்கும்வரை அவர்கள் ஜாதிய தீயில் என்னை ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்... சாதிவெறியர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.. நன்றி நண்பரே...

      Delete
  8. சாதி என்னும் தீ எப்ப அணையுமோ...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எத்தனை பாரதி, பெரியார் வந்தாலும் இந்த சாதிய அரசியல் உள்ளவரை பெரிய மாற்றத்தை நோக்கி நமது சமுதாயம் நகரப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம் நண்பரே... :(

      Delete
  9. இளவரசனின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தான் சொல்ல வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் கண்டிப்பாக வரக்கூடாது ஹீஷாலி... ஆனால் நமது சமூகத்தில் சாதிய சிந்தனையும் சாதிய அரசியலும் விடுமா என்பது பெரும் கேள்விகுறி தான் !

      Delete