மண்ணைத்தின்று உயிர் வாழும் மக்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி)
"ஒரு தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் பாரதி. ஆனால் இங்கொரு மக்கள் கூட்டம், களிமண்ணை உணவாகத் தின்று ஊசலாடும் தங்கள் உயிரிற்கு ஒட்டுப்போட்டு வாழ்கிறது. கொடுமை என்னவென்றால், பணமிருந்தாலும் உணவு, காய்கறி கிடைக்கவில்லை. ஆகையால் அன்றாட வாழ்வில் வெட்டியெடுத்து இவர்கள் உண்பது வெறும் களிமண் மட்டுமே. ஒரு சாக்கு களிமண்ணின் விலை 5 அமெரிக்க டாலர்கள். இப்படியான மக்கள் வாழும் நாடு, க்யூபா அருகிலுள்ள கெய்டி என்ற தீவு. இயற்கை சீற்றத்தால் சீரழிந்து, 3/4 பேர் வறுமைகோட்டிற்கு கீழேவாழும் இந்த அப்பாவி மக்களைப் பற்றிய காணொளி இது. இந்த மக்களைப் பற்றிய மற்ற விவரங்கள் நான்கு நிமிட காணொளியில் கீழே. (உணவுப் பொருட்களை வீனடிப்போர் இவர்களின் நிலையை மனதில் கொள்ளவும்).
கொடுமை! உணவை வீணடிப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விசயம்!
ReplyDeleteகண்டிப்பாக நண்பரே.. வருகைக்கு நன்றிகள்..
Deleteகண் கொண்டு காணமுணியாத கொடுமை!
உண்மைதான் ஐயா..
Deleteமனம் கனத்துப் போனது சடங்குகளின் பெயரால் வீணடிக்கப்படும் உணவுகளுக்கு எல்லையே இல்லை சிந்திப்பார்களா ?
ReplyDeleteசிந்தித்தால் நலம் மேடம்... கருத்திற்கு மிக்க நன்றி..
Deleteமனம் கணத்துப் போய்விட்டது :(
ReplyDeleteஎனக்கும் தான் நண்பா..
Deleteகண்களில் கண்ணீர் மட்டுமே :( ... இங்கே நாம் உணவை விழா நாட்களில் , அன்றாட நாட்களில் வீணடிக்கிறோம்....மாற்றம் வேண்டும்
ReplyDelete