Saturday, 6 July 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 21

***

பூக்களுக்கிடையே நீ
உன்மீது வண்ணத்துப்பூச்சி

***

என்ன தவறோ ?
சத்தம்போடுகிறது வானம்
அழுகிறது மேகம்

***


காஸ்டிலியான
ஷாப்பிங் மாலிர்க்குள்
இலவசமாகக் கிடைகிறது
குட்டிக் குழந்தைகளின் புன்னகை

***

கள்ளிச் செடியிலும்
கோவில் சிலையிலும் பால்
ஒன்று, கொல்வதற்காவது
பயன்படுகிறது

***

நாம் இருவர்
தங்கும்விடுதியில் கிடைத்தது
ஒருவருக்கான கட்டில்
சௌகரியமாய் இருந்தது உறக்கம்

***

நீ வெட்கப்படும் நேரங்களில்
உன் விரல்களுக்கும்
இதழ்களுக்குமிடையே
சிக்கித் தவிக்கிறது பாசிமணி

***

என் சட்டைப் பையுக்குள்
பல சாகசங்களைச் செய்கிறது
உன் பள்ளிப்பருவப் புகைப்படம்

***

வீரர்களின் தியாகம்
நியாபகப் படுத்துகிறது
குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்

***

மழைகாலம்
நசுக்கப்படும் நத்தைகள்
அறியாத பாதங்கள்

***

கள்ளிப்பாலும்
அரளிவிதையும் விஷம்
அதன் பூக்களில் தேன்,
சேகரிக்கிறது வண்டுகள்

***
அன்புடன்,
அகல்

9 comments:

  1. அனைத்தும் அருமை... சௌகர்யமான உறக்கமும், சாகசமும் மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. azhagana kavidhaigal,rasikavum seigeradhu..semma :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தேன்மொழி...

      Delete
  3. அனைத்தும் அழகாக உள்ளது... ஆனால் இந்த கவிதை எனக்கு புரியல...

    கள்ளிச் செடியிலும் கோவில் சிலையிலும் பால் ஒன்று, கொல்வதற்காவது பயன்படுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... அந்தக் கவிதையின் விளக்கம் இதுதான்... கள்ளிச் செடியிலும் பால் இருக்கிறது, கோவில் சிலைகளிலும் பால் ஊற்றுகிறோம் ஆனால் கள்ளிப்பால் கொலை செய்யவாவது பயன்படுகிறது... கோவில் சிலைகளில் ஊற்றப்படும் பால் எதற்கும் பயனில்லை என்பதே அது...

      Delete
  4. அருமையான அர்த்தமுள்ள கவிதைகள்! நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருஹ்திற்கு மிக்க நன்றி தல..

      Delete
  5. சௌகர்யமான உறக்கம்,alum mekam romba pudichiruku....anaithum alaku :) valthukal

    ReplyDelete