Saturday, 6 July 2013

கரை சேராத கணவன்

கட்டுமரம்வரை வந்து 
விட்டுசென்ற
கணவனைக் காணவில்லை

எந்தத் திசையில்
உடலைத் தேடுவதென்று
தெரியாமல்

அதிகாலையில்
கடற்கரையில்
பதிந்து மறைந்துபோன
அவன் பாதத்தைத்
தேடுகிறாள் அவள் !


அன்புடன்,
அகல்

6 comments:

  1. சோகம்... கடலுக்கு செல்பவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நமது தமிழ் மீனவர்களின் நிலை இதுதான் தோழர்...

      Delete
  2. துக்கம் கலந்த கவிதை.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் குமார் சார்..

      Delete