Tuesday, 19 March 2013

தமிழ் மக்களே, மாணவர்களே, இதைச் செய்யாதீர்கள்

வணக்கம் !


போராடும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரண்டு நாட்களுக்கு முன் (17/3/13) தஞ்சாவூரில் புத்த பிக்குகள் நமது மக்களால் தாக்கப்பட்டனர். இதைப் பல முகநூள் பக்கங்கள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் பெருமையாகப் பதிவு செய்தன. ஆனால் இது கண்டிக்கத்தக்க மிகவும் தவறான செயல் என்ற அடிப்படையை நாம் உணர வேண்டும். இங்கே ஒரு சிங்களவனை தாக்கியவுடன், ஈழத்தில் பத்து தமிழன் தாக்கப்பட்டிருப்பன். நமது மக்களின் மீதான அன்பை இவ்வாறு காண்பிப்பதால், நாம் மேலும் மேலும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் கொடுக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை.

அதோடு இனவெறி பிடித்த சிங்களவன் செய்ததையே நாமும் செய்தால் நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து குரல்கொடுத்த சில சிங்கள பத்திக்கையாளர்கள் கூட கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சில சிங்களர்கள் நமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு நாம் தேவையற்ற காரியங்களைச் செய்வதன் மூலம், சில நடுநிலை சிங்கள மக்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள்.



இங்கே இந்த சிறிய பதிவை இடுவதன் நோக்கமே, இது போன்ற தாக்குதல்கள் நம்மை தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்ற ஆதங்கத்தில் தான். இது தொடருமானால், இனவாத சிறிலங்கா அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் நமக்கு எதிராக எழுதுவார்கள். மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நம்மீது தவறான பிம்பம் விழும். மாணவர் போராட்டம் ஒரு தீவிரவாதச் செயல் என்று சிங்களத் தூதர் ஒரவன் சொன்னது உண்மையென பத்திரிகைகள் காட்டும்.

நமது மாணவர் போராட்டத்தை பெரிதாக முன்னிறுத்தாத அரசியல் ஊடகங்கள் இது போன்ற சந்தர்ப்பத்திற்கே காத்துக்கிடக்கின்றனர். எப்படியாவது நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த காரணங்களைத் தேடிக்கொண்டிருகின்றனர். மாணவர் போராட்டம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் இவ்வாறு தாக்குவது நமக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது தமிழ் மக்களை மேலும் நசுக்கும் விதமாகவே இருக்கும். அதனால் இதுபோன்ற தாக்குதல்களில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.


உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம். 


உண்மையில் நீங்களும் ஒரு போராளியானால், த.தே.த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள் "நமக்கு எதிரி சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இராணுவமுமே தவிர, சிங்கள மக்கள் அல்ல".

அன்புடன்,
அகல்

11 comments:

  1. yes. We should oppose them. But we should not even touch them

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நண்பரே... இப்போதைய சூழலில் அவர்களை தாக்குவதன் மூலம் நம்மை நாமே தாக்கிக் கொள்கிறோம்..

      Delete
  2. மிகவும் முக்கியமான பதிவை அல்லது நம் மக்களுக்கு தேவையான சிந்தனையை சரியான நேரத்தில் நண்பர்களுடைய மனதில் விதைதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அண்ணே..

      Delete
  3. Replies
    1. நன்றிகள் முரளி சார்..

      Delete
  4. சரியான நேரத்தில் சரியான கருத்து வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றிகள்...

      Delete
  5. மீண்டும் சிங்களம் தன் அடக்குமுறையை, தாக்குதலை தமிழர்கள் மீது தொடங்கியுள்ளது.

    இனவெறி பிடித்த பௌத்த பிக்குகள் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வெறிபிடித்து அலைகிறார்கள்.

    நடப்பதையெல்லாம் பார்க்கும்போது பிக்குகள் மீதான தாக்குதல் சரியானதே என தோன்றுகிறது.

    பிக்குகளை தாக்கினால்தானே தவறு. இனவெறி பிடித்த மிருகங்களை தாக்கினால் தவறா?

    ReplyDelete