பரதேசியும் எமவாசியும்
30 வருடங்கள் மூச்சுவிடாமல்
அங்கே அகிம்சையில் அறப்போர் நடத்தி
தந்தை செல்வா தோற்றதனால்
ஆயுதத்தோடு அவதரித்தான் ஒருவன்
அவன்தான் பிரபாகரன்
இங்கே நடக்கும் உங்கள் ஈன அரசியலால்
இன்னும் ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள்
அவதரித்து விடுவார்களோ என்று
என் அடிமனது அடித்துக் கேட்கிறது
அன்னை அன்னை என்று சொன்னவளே
எம் இனத்தின் ஒட்டுமொத்த இழப்பிற்கு
துணைபோன எமவாசி
தமிழ் தமிழ் என்று சொன்னவனே
தமிழச்சி மார் அறுக்கத்
துணைபோன பரதேசி
அடே அயோக்கியப்பயலே...
உயிரைக் கொன்று ஊனைத் தின்னும்
உள்நாட்டுக் கழுகுகளே
இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..
இல்லையேல்...
எம் மாணவர்படை
உன்னை சுட்டெரிக்கும் சூரியனாகும்
உனக்கு சாகும் முன்னே சமாதி கட்டும் !
அன்புடன்,
அகல்
விரைவில் நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteஎப்படியும் நடக்கும்... நடக்க வேண்டும்.. நன்றிகள் தனபாலன் சார்..
Delete
ReplyDeleteவணக்கம்!
வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளீா்!
வாழ்த்துக்கள்!
ஓங்கி உரைத்தீா்! உறங்கும் தமிழ்ச்செவிகள்
வீங்க உரைத்தீா் விரைந்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம்
ReplyDelete23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்அருமையான கவிதை அர்த்தம்முள்ள கவி வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி ரூபன்..
Delete