Wednesday, 22 May 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 15

ஜனனமும் மரணமும்

அவளின் நெற்றியில் பிறந்து
நெஞ்சுக்குழியில் மடிகிறது
உல்லாசப் பயணம் செய்த
ஒற்றை வியர்வைத்துளி !



நினைவுகள்

பட்டும் படாமல் தலையில்
ஒரு கொட்டு வைத்து,

தன் மகளைத்
திட்டிக்கொண்டே
தலைவாரிவிடும்
அம்மாவைப் பார்க்கும்
ஒவ்வொரு பெண்ணிற்கும்
நினைவில் வராமல்
இருப்பதில்லை

தன் தாயும், தாய் வீடும் !






அவள் 

எட்டுமுழத் தோகை
போர்த்திய மயில்

சேலையில் அவள் !





யாருக்காக ?

ஆளும் இல்லை
மழையும் இல்லை
யாருமில்லா காட்டில்
யாருக்கோ குடைபிடிக்கிறது
காளான் !





இதழ் இலக்கணம் 

எதுகையும் மோனையும்
இயல்பாய் அமைந்த வரிகள்
அவள் இதழ்கள் !




கண்ணாடி

அவள்
இதழ்களின் வரிகளை
எண்ணிப்பார்க்க
வேண்டுமென்றாள்

நான் கண்ணாடியைக்
காட்டினேன்

அவள் என் கன்னத்தைக்
கண்ணாடியாக்கினாள் !





தவம்

அங்கே
ஏசி இயந்திரத்தில்
எது சிறந்ததென்று
விவாதம்
நடந்து கொண்டிருக்கிறது

நான்
உன் முந்தானை நுனிக்
காற்றிற்காக
தவமிருந்து கொண்டிருக்கிறேன் !





குளிர் 

நிலவுப் பெண்ணிற்கு நடுக்கம்
போர்வையாகிறது மேகம் !





இல்லாத ஒன்று 

வெள்ளைக்காரியிடம் 
இல்லாத அப்படியென்ன 
தமிழச்சியிடம்
இருக்கிறது என்று
தெரிந்துகொள்ள
வேண்டுமாம்

வேறென்ன.., கருப்புதான்....

மனதை,
ஆடிக் களவாடும்
கருவிழியும்
அசைந்தே களவாடும்
கார்மேகக் கூந்தலும் !











பயிரை மேயும் வேலி 

ரோஜா தோட்டத்திற்குள்
நடந்து செல்கிறாள் அவள்..

பூக்களைப் பாதுகாக்கும்
முட்கள் ஏனோ
இந்தப் பூவைக் குத்தியது !



அன்புடன்,
அகல் 

12 comments:

  1. அனைத்தும் அருமை...

    மிகவும் ரசித்தவை :

    ஒற்றை வியர்வைத்துளி - போர்த்திய மயில் - காளான்

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. ellam kavithaium super..:-)

    "aval,kulir,kannadi" romba pidichu iruku..

    images la kavithaiku ah enum azhagu serkudhu :-)

    ReplyDelete
    Replies
    1. neenga enna sir 24 hrs brain ku work kuduthutey irupengalo ;-)

      Delete
    2. Ha ha... En apdi kekuringa ?

      Delete
    3. neenga share pandratha vechu tha soldra.. :-)

      Delete
    4. ஹா ஹா இதெல்லாம் திடிருன்னு தோன்றது... ரொம்ப யோசிச்சாவல்லாம் கவிதை வராதுங்க..

      Delete
  3. arumai akal....kanadi um viyarvai thulium romba romba pudichiru.....(apurame enoru visayamum therinchukiten.."yosicha kavitha varathu nu.....nan yosikiren pada padal varikal than varuthu) :) keep rocking man

    ReplyDelete
  4. அனைத்தும் சிறப்பு! தாயும் தாய்வீடும், காளான் கவிதையும் நிலா கவிதையும் மிகவும் கவர்ந்தன! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..

      Delete