இயற்கை எனது ஆசான்
பள்ளிநேரம் முடிந்துடன்
மேற்கு திசைநோக்கி
மிதிவண்டியை
இயக்கும் எனக்கு...
விறகுச்சூட்டில் முத்தமிடும்
சூரிய ஒளியும்
அம்மிக்கல்லைத் தூக்கிஎறியும்
ஆடிக்காற்றும்
அவ்வப்போது வந்துபோகும்
ஆலங்கட்டி மழையும்
அப்போதே
சொல்லிக் கொடுத்தது..
வாழ்க்கையில்
எதிர்ப்புகளை எவ்வாறு
எதிர்கொள்வதென்பதை !
அன்புடன்,
அகல்
அழகிய சொல்லாடல் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி கண்ணதாசன் சார்....
Deleteரசித்தேன்... படமும் அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன் சார்...
Deleteஅழகிய கவிதை.
ReplyDelete...விறகுச்சூட்டில் முத்தமிடும்
சூரிய ஒளியும்
அம்மிக்கல்லைத் தூக்கிஎறியும்
ஆடிக்காற்றும்.... இவை எல்லாம் இப்பொழுது யாருக்குத் தெரியும். ரசனை.
மிக்க நன்றி மாதேவி...
Deleteஅருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா..
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் அகல்.
மிக்க நன்றி அருணா....
Deleteநன்றிகள் சார்...
ReplyDelete