உனது ஆசை என்ன என்று என் நண்பர் ஒருநாள் கேட்டார்... இதோ எனது ஆசை...
எப்போது இறப்பேன் என்று தெரியாது அதனால் நீண்டநாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் இறப்பதற்கு முன்னால், என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும். மக்கள் வெவ்வேறு மதத்தை தழுவினாலும், மனதளவில் உள்ள மதப் பாகுபாட்டையும், ஏழை-பணக்காரன், ஜாதி-மத-இனவாத மோதல்களையும் களைய வேண்டும். எந்த வித்தியாசமும் இல்லாமல் உலகில் பிறந்த நாம் முதலில் மனிதர்கள், சமமானவர்கள் என்பதை ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்க வேண்டும்.
சாதிகளையும் அதன் பெயரில் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அரசியல் அயோக்கியர்களையும் இளைய சமுதாயத்தின் துணைகொண்டு அழிக்கவேண்டும். சமுதாயத்தில் மாற்றம் மேல்மட்டத்தில் இருந்து வராது, அது ஒவ்வொரு தனிமனிதனிடம் இருந்து பிறக்கவேண்டும் என்பதை அழுத்தமாக மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும். குழந்தைகளை இயந்திரம் போல் நடத்தும் பள்ளிகளையும் அதன் கல்வி முறைகளையும் மாற்றவேண்டும்.
வியாபாரமாகப் போய்விட்ட உயிர்காக்கும் மருத்துவத்துறையை முடிந்த அளவு மாற்றவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு சமூகச் சித்தனைகளைப் புகுத்தி வளர்க்கவேண்டும் என்பதை உணர வைக்கவேண்டும். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் கல்விமுறை அனைவருக்கும் சமம் என்ற நிலை வரவேண்டும். சுயநலப் போர்வையில் உறங்கிக்கொண்டிருக்கும் மனிதத்தை தட்டி எழுப்பவேண்டும்.
தனித் தமிழீழம் மலர வேண்டும். என் தாய்த் தமிழ் காக்கப்பட வேண்டும்.
இவை அனைத்திற்கும் எனது எழுத்துக்களும் செயல்களும் ஒரு துளியேனும் உதவ வேண்டும்.
இது பேராசையாகத் தெரியலாம். ஆனால் இதுதான் எனது ஆசை. தமிழகம் அறியப்பட்ட பெரிய எழுத்தாளன் அல்ல நான். ஆனால் எனது எழுத்துக்கள் எனது ஆசையை நோக்கியே பயணிக்கும்.
எனது தளத்தில் http://
அன்புடன்,
அகல்
தங்களின் நல்லெண்ணங்கள் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆனால் இது பேராசை அல்ல...
நன்றிகள் தனபாலன் சார்...
Deleteநிதரசனமான உள்ளத்தில் தோன்றும் ஆசைகள்..
ReplyDeleteஉங்களுக்கும் தோன்றியதில் தவறில்லை...
நன்றிகள் மகேந்திரன் சார்...
Deleteநியாயமான ஆசைகள்! நிறைவேற வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்திற்கு நன்றிகள் நண்பரே..
Deleteபொற்றுதற்குரிய ஆசைகளே இவைகள் நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரரே !
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
Delete